இயற்கை அளித்த மருத்துவ குணம் நிறைந்த உணவுப் பொருள் நெல்லிக்காய். நெல்லிக் காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந் துள்ளன. இதன் காரணமாக தான் ஆயுர்வேதத்தல் நெல்லிக்கனியினை - மருத்துவப் பொருளாக அதிகளவு பயன்படுத்துகின்றனர். வைட்டமின்கள் , நார்ச்சத்து, சோடியம், பொட்டாசி யம், பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், ஃபோலேட், நியாசின், அமினோ அமிலங்கள், தையமின், வைட்ட மின் 'சி' போன்ற ஊட்டச்சத்துக்கள் நெல்லிக்காயில் நிறைந்துள்ளன. நெல்லிக்காய் சந்தையில் மிக எளிதில் கிடைக்கக் கூடிய உணவுப் பொருள். வாரத்தில் ஒரு முறை நெல்லிக்காய் ஜூஸ் அருந்தி வருவதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் வேதிப் பொருட் கள் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்கின்றன. இருதய ரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிவதையும் தடுக்கின்றன. ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவிபுரிகின்றன. சரும நோய்களை குணப்படுத்துவதில் நெல்லிக் காய்க்கு தனி இடம் உள்ளது. பொதுவாக ரத்தத்தில் கழிவுகள் அதிகரிக்கும் போதுதான், சருமம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே சரும நோய் உள்ளவர்கள் வாரத்தில் ஒரு முறை காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸ் அருந்தி வர ரத்தத்தில் உள்ள கழிவுகள் சுத்தம் செய்யப்படு கின்றன. இதன் மூலம் சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளான தோல் சுருக்கம், சரும வறட்சி வெண்புள்ளிகள் போன்றவை சரியாகும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் 'சி' சத்து உடல் லில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இதன் மூலம் நம் உடலில் ஏற்படும் பல்வேறு விதமான தொற்று நோய்கள் தடுக்கப்படுகின்றன. அதா வது அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல், ஜலதோஷம் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள், வாரத்தில் ஒரு முறை நெல்லிக்காய் ஜூஸினை, ஒரு கிளாஸ் காலை வெறும் வயிற்றில் அருந்திவருவ தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க லாம். - எலும்புகள் வலுப்பெற உடலுக்கு கால்சியம் சத்து அவசியம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தி பருக்கும். இந்த கால்சியம் சத்து நெல்லிக்கனியில் அதிகளவு நிறைந்துள்ளது. மேலும் எலும்புகளை சேதப்படுத்தும் செல்களின் செயல்பாட்டினை குறைத்து, எலும்புகள் சேதமடையாமல் பாதுகாக் கிறது. ஆய்வு ஒன்றில் மூட்டுவலிகளால் அவதிப்படும் நோயாளிகள், இந்த நெல்லிக்காய் ஜூஸினை காலை வெறும் வயிற்றில் அருந்தி வர, மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி குறைகின்றது என்றும் கூறப் பட்டுள்ளது.