இதய நோய் தடுக்க … தவிர்க்க !

இதயத் தமனிகள் மெல்லியதாதல் அல்லது அவற்றில் தடை ஏற்படுவதே இதய நோய் எனப்படுகிறது. பொதுவாக இது தமனித் தடிப்பால் உண்டாகிறது. தமனியின் உட்சுவரில் கொழுப்பு படிவதால் இத்தடிப்பு ஏற்படுகிறது. இது தமனியில் அடைப் புண்டாக்கி இதய தசைக ளுக்கு இரத்தம் செல்வ தைத் தடுக்கிறது. இதனால் இதயத்துக்குச் செல்லும் இரத்த அளவு குறைகிறது.. இதயம் தகுந்த முறையில் செயல்படத் தேவையான உயிர் வளியும் முக்கிய மான உயிர்ச்சத்துக்களும் கிடைப்பதில்லை. இதன் காரணமாக நெஞ்சுவலி உண்டாகிறது. இதயத் தசையின் ஒரு பகுதிக்கு நிரந்தரமாக இரத்தம் கிடைக்கவில்லை என்றாலோ, இதயத்துக்குத் தேவைப்படும் எரிசக் தியின் அளவு அதற்குக் கிடைக்கும் இரத்தத் தின் அளவைவிட மிக அதிகமாக இருந்தாலோ மாரடைப்பு (இதய தசைகளுக்கு காயம் உண் டாகுதல்) ஏற்படுகிறது. - இந்தியாவில் கிராமப் புறங்களை விட நகர்ப் புறங்களில் இருப்பவர்கள் அதிகமாக இதயநோயால் மரணமடைகிறார்கள், இதய நோயின் முக்கி யக் கூறு நெஞ்சுவலியும் மாரடைப்பும் ஆகும். இத யத்துக்குத் தேவையான இரத்தமும் உயிர்வளியும் கிடைக்காத போது வலி உண்டா கிறது. வலியின் அளவு ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். கனமாக இருப்பது போலவும், யாரோ இதயத்தைப் பிழிவது போலவும்


 
உணர்வு உண்டாகும். நெஞ்சு எலும்புக்கு அடி யில் மட்டுமல்லாமல் கழுத்திலும், புயங்களிலும், வயிற்றிலும் அல்லது மேல் - முதுகிலும் அசௌகரிய மான உணர்வு ஏற்படும். பொதுவாக உடல் வேலை செய்யும் போதும் உணர்ச்சிவயப் படும் போதும் வலி தோன்றி ஓய்வு எடுக்கும் போதோ அல்லது நைட்ரோகி ளிசரின் என்ற மருந்தை உட்கொள்ளும் போதோ மறைந்துவிடும். மூச்சடைப்பும், உடல் வேலையின் போது களைப்பும் பிற அறிகுறிகள். பெண்கள், வயதான - வர்கள், நீரிழிவு நோயாளிகள் நெஞ்சுவலிதவிர களைப்பு, மூச்சடைப்பு, பொதுவான பலவீனம் போன்ற அறிகுறிகளையும் உணர்வார்கள். உடல் பருமன், புகைத் தல், மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், உடல் வேலை அற்ற வாழ்க்கை முறை, நீரிழிவு நோய், . 

-II இதய நோய் கொண்ட குடும்ப வரலாறு போன்ற இந்நோயுடன் தொடர்பு டைய ஆபத்தான காரணிகள் நிறைய உண்டு. 

இதய மின்னலை வரைவு (இ.சி.ஜி), உடல் பயிற்சி அழுத்த சோதனை, வண்ண டாப்ளர் சோதனை, தமனி இதய அழுத்தப்பதிவு (Coronary angiography) இதயத் தமனிகளை எக்ஸ் கதிர் மூலம் மதிப்பிடும் சோதனை, மின்னொலி இதயவரைவு மனவழுத்த சோதனை (Echocardiogram stress test), மின் கற்றை கணினி வரைவி (Electron beam computed tomography (EBCT) தமனியின் உட் பரப்பில் கால்சியம் உள் ளதா என்பதைக் கண்ட றிய- கால்சியம் அதிகம் இருந்தால் இதய நோய் வர அதிக வாய்ப்பு , இதய கணினி ஊடுகதிர்ப்படம் (சி.டி.ஸ்கேன்), அணுக் கரு அழுத்த சோதனை போன்றவை இதயநோயை கண்டறியும் மருத்துவப் பரிசோதனை முறைகள். ஸ்போரின் 75 அல்லது எக்கோஸ்போ ரின் போன்ற ஆஸ்பரின் மருந்துகள் கொடுத்து இந்நோயை மேலாண்மை செய்கிறார்கள் மருத்துவர் கள் இதய தமனி மாற்றுப்பாதை, இதய மாற்றம் போன்ற அறுவைச் சிகிச்சை முறைகளும் உண்டு வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத் திக் கொள்வதின் மூலம் இதயநோயை தொடக் கத்திலேயே தடுக்கலாம். எடை கட்டுப்பாடு, புகை பிடித்தலை நிறுத்துதல், மாறுபக்க கொழுப்பை தவிர்த்தல் நடை.., ஓட்டம், நீச்சல் போன்ற உடல் பயிற்சிகள் போன்றவற்றைத் தொடர்ந்து செய்யலாம். இரத்த அழுத் தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இவை யெல்லாம் இரத்தத்தில் உள்ள கொழுப்பை நாளடைவில் குறைக்கவும் உத வும். ஒமேகா-3 கொழுப்பு உள்ளெடுப்பை அதிக ரிக்க மீன் எண்ணெய் அருந்தலாம். உளவியல் அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 


மேலும்
, ஆரோக்கியமான, சமநிலையான உணவு அவசியம். பச்சைக் காய்கறிகள், பழங்கள், முழுதானியங் கள் ஏராளமாக அடங் கிய குறைந்த கொழுப்பும் நிறைந்த நார்ச்சத்தும் கொண்ட உணவே சிறந்தது.