பருவகால மாற்றங்களின் போது உடலில் அதிக அளவு பாதிக்கப்படுவது சருமம் தான். அதிக வெப்பம் கொண்ட கோடை காலத்தில் சருமம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது. தேவையான அளவு தண்ணீர் பருகுவது, கோடைக்கேற்ற குளிர்ச்சியான உணவு முறை, மிதமான உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். இவை தவிர சருமத்தில் பூசப்படும் பேஸ்பேக், மாஸ்க் போன்ற மேல்பூச்சுக்களும் நன்மை அளிக்கின்றன. குறிப்பாக கோடை காலத்தில் கிடைக்கும் பழங்களைக்கொண்டு பேஸ்பேக் தயாரித்து பயன்படுத்துவது நல்ல பலன்களை அளிக்கிறது. சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் சில குறிப்புகள்....
வெள்ளரி மற்றும் பால் பேக் :
ஒரு சிறிய அளவு வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு, அதனுடன் 50 மி.லி பால் மற்றும் 1 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து, நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த விழுதை முகத்தில் பூசி 20 முதல் 25 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
பயன்கள் :
வெள்ளரிக்காயின் சாறு சரும பாதிப்புகளை குணப்படுத்துகிறது மற்றும் வெயிலால் கருத்த சருமத்தை அதன் இயல்பு நிலைக்கு திரும்பச்செய்கிறது. இந்த பேஸ்பேக் சருமத்துக்கு புத்துணர்வை அளித்து, வறட்சி ஏற்படுத்தாமல் மென்மையாக பராமரிக்க உதவுகிறது,
மாம்பழம் மற்றும் தயிர் பேக் :
நன்கு பழுத்தமாம்பழத்தின் சதைப்பகுதியை ஒரு டேபிள்ஸ்பூன்
அளவு எடுத்துக்கொண்டு, அதனுடன் 2 டீஸ்பூன் கெட்டியான தயிர்
சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ள வேண்டும். இந்த முகத்தில் பசி 20
நிமிடங்கள் வரை காத்திருந்த பின்னர், முகத்தை நன்றாக தேய்த்துக்
கழுவ வேண்டும்.
பயன்கள் :
மாம்பழ்த்தில் உள்ள வைட்டமின் 'சி' மற்றும் 'ஈ' சத்துக்கள், புற
ஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து சருமத்தைக் காக்கின்றன. இன்
இயல்பான தன்மையை மட்க உதவுகின்றன. முகப்பரு ஏற்படாமல்
தடுக்கின்றண. தயிரிலுள்ள லாக்டிக் ஆசிட் சருமத்தை ஏற்படாமல்
தடுக்கின்றன. தயிரிலுள்ள லா மென்மையாக்குகிறது.
தக்காளி பேக் :
2 டீஸ்பூன் தக்காளி சாறுடன், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கெட்டியான
கலவையாக தயார் செய்யவும். இந்த கலவையை முகத்தில் பூசிவிட்டு
15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீ ரில் முகத்தைக்
கழுவலாம்.
பயன்கள் :
தக்காளியில் நிறைய உயிர்ச் சத்துக்களும், வைட்டமின் 'சியும் உள்ளன.
அதிலுள்ள 'அஸ்கார்பிக் ஆசிட்' எனும் ஆன்டி ஆக்சிடன்ட் சருமத்தின்
துளைகளுக்குள் பரவி, சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது.
நெல்லிக்காய் தயிர் பேக்:
2 டீஸ்பூன் அரைத்த நெல்லிக்காய் விழுதுடன், ஒரு
டீஸ்பூன் தயிர் சேர்த்து, நன்றாக கலந்து முகத்தில் பூசவும். இந்த கலவை
நன்றாக உலர்ந்ததும் முகத்தைக் கழுவவும்.
0 கருத்துகள்